Dhanush’s D56 Begins with Grand Pooja in Sivaganga
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான D56 படப்பிடிப்பு சிவகங்கை மாரநாடு கருப்பசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ், பிரைமார்க் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
படப்பூஜையை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு பிரம்மாண்ட கிடா விருந்து வழங்கப்பட்டது. மேலும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் நிகழ்விடம் திருவிழா போல களைகட்டியது. தொடக்க விழாவில் படக்குழுவினர் தங்களது எதிர்பார்ப்புகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
“தனித்துவமான கதை” – வடிவேலு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசிய நடிகர் வடிவேலு, சினிமாவில் சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும் என்றும், தற்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாரநாடு கருப்பசாமி கோயில் மிகவும் விசேஷமானது என்றும், இவ்வளவு பெரிய கூட்டத்தையும் மக்களின் அன்பையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
“இந்தப் படம் சாதாரணமான படம் இல்லை. எந்த அரசியல் தாக்கமும் இல்லாத, தனித்துவமான ஒரு படம். கதையைக் கேட்டபோது மிகவும் பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய படம்” என வடிவேலு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், இன்னும் சில நாட்களில் தலைப்பு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நம்ம மண்ணின் கதையை அழகாக உருவாக்கியிருக்கிறார்” – எஸ்.ஜே.சூர்யா
விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பொதுவாக திரைப்படங்களின் பூஜை சென்னையில் நடைபெறும் நிலையில், மாரநாடு கருப்பசாமியின் அருளோடும், மக்களின் அன்போடும் இந்தப் பூஜை நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவை பாராட்டிய அவர், “அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தின் மூலம் சிறந்த உணர்வை உருவாக்கக்கூடிய இயக்குநராக இருக்கிறார். ‘லப்பர் பந்து’ படத்திலேயே அவரது திறமை தெரிந்திருக்கும். தற்போது நம்ம மண்ணின் கதையை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார்” எனக் கூறினார்.
தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி, வடிவேலு மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் பங்களிப்பு என D56 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடக்கத்திலேயே அதிகரித்துள்ளது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India
Sulochana Lyrical Video | Sigma | Catherine Tresa Alexander | Sundeep | Faria | Thaman…