Dragon 2 Poster Is Fake Clarifies the Film’s Production Team
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ‘டிராகன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனுடன், ‘டிராகன் 2’ எனக் குறிப்பிடப்பட்ட சில போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகின.
இதுகுறித்து தற்போது படக்குழு விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த போஸ்டர் போலியானது என்றும், அதை படக்குழு வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த போஸ்டரை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்றும் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் ‘டிராகன் 2’ தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் போஸ்டர் மற்றும் தகவல்களுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India
Sulochana Lyrical Video | Sigma | Catherine Tresa Alexander | Sundeep | Faria | Thaman…