சூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் இயக்குனர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தார்.

பின்னர் அவர் விலகியதால் விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’, சீதக்காதி போன்ற படங்களில் வயதானவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

1 day ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

1 day ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

1 day ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

1 day ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

1 day ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

1 day ago