Nidhi Agarwal to star opposite Power Star
தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நிதி அகர்வால். அந்த வகையில், தெலுங்கில் உருவாகும் ஒரு வரலாற்று படத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார்.
இப்படத்தை சிம்புவின் வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். முதன்முறையாக பவன் கல்யாணுடன் நடிக்கவுள்ளதால், நடிகை நிதி அகர்வால் உற்சாகத்தில் திளைத்துப்போய் உள்ளாராம்.
Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…
O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…
John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் முதன்முறையாக ஒரே திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர்…
நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓம் - சாப்டர் 1: உதிரம் - தி பிளட் வுட்’…