Suriya and Dhanush to Join Hands for a New Film Directed by Mani Ratnam
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் முதன்முறையாக ஒரே திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் இருவரையும் கதாநாயகர்களாக நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு வலுவான கதையொன்றை மணிரத்னம் உருவாக்கியுள்ளதாகவும், இதுதொடர்பாக இரு நடிகர்களிடமும் அவர் கதை சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கதையில் நடிக்க இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது கால்ஷீட் மற்றும் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக முடிவடைந்தால், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா – தனுஷ் என இரண்டு முன்னணி நட்சத்திரங்களும் மணிரத்னம் இயக்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…
O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…
John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…
நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓம் - சாப்டர் 1: உதிரம் - தி பிளட் வுட்’…
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குப் பரிசளித்த புகைப்படங்களை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில்…