vijay-order-to-makkal-iyakkam
சென்னையில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. அரசாங்கத்தின் மீட்பு பணிகள் காரணமாக தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பி வருகிறது.
பிறந்த போதிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, மடிப்பாக்கம், மணப்பாக்கம், அசோக் நகர், கேகே நகர், அம்பத்தூர், கொரட்டூர், கொளத்தூர், முடிச்சூர், தாம்பரம் போன்ற பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
பலரும் உதவி கேட்டு சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து பதிவு செய்துள்ளார்.
இது குறித்த பதிவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என தெரிவித்துள்ளார்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…