“விஜய் எனக்கு தம்பி தான்..ஆனா இது எனக்கு ரொம்ப வருத்தம்..”-மனம் திறந்து சொன்ன குஷ்பூ
விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது.
இப்படம்தான் எனது கடைசிப் படம் என எப்போது அவர் தவெக கட்சி துவங்கினாரோ அன்றே அறிவித்துவிட்டார். அறிவித்து 2 வருடங்கள் ஆகியும் இன்றும் ரசிகர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு படத்திற்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் விஜய் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. திரைப்பிரபலங்களும் விஜய்யின் இந்த முடிவை கேட்டு சற்று அதிர்ச்சியானார்கள்.
அவ்வகையில் நடிகை குஷ்பூவும் விஜய்யின் இந்த முடிவு ஷாக்காக இருந்தது என கூறியிருக்கின்றார்.
இது தொடர்பாக குஷ்பூ தெரிவிக்கையில், ‘விஜய் என்னுடைய தம்பி மாதிரி, என்னை அவர் அக்கா என்று தான் அழைப்பார். நான் அவரின் தீவிரமான ரசிகை, அவரின் நடிப்பு, நடனம் ஆகியவற்றை பார்த்து வியந்திருக்கிறேன். கண்டிப்பாக ஜனநாயகன் தான் அவரின் கடைசிப் படம் என நினைக்கும்போது கஷ்டமாக தான் இருக்கின்றது. அவர் ஒரு புதிய பயணத்தை துவங்கியிருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். என குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.
விஜய் பற்றி குஷ்பூபேசிய இந்நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


