இரட்டை கொண்டாட்டத்திற்கு ரெடி ஆகும் விஜய் ரசிகர்கள்!

எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக வர திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான தாமதம் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்கிடையில், படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவல்கள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், கிடைத்தவுடன் விரைவில் வெளியீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்து சமூக வலைதளங்களில் புதிய தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதன்படி, படம் ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 என்பதால், அதற்கு முன்பாக படத்தை வெளியிட தயாரிப்புக் குழு திட்டமிட்டு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால், விஜய் ரசிகர்களுக்கு ஜூன் மாதம் இரட்டை கொண்டாட்டமாக அமையும். ஒருபுறம் ‘ஜனநாயகன்’ வெளியீடும், மறுபுறம் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாததால், வெளியீட்டு தேதி உறுதியாகுமா என்பது விரைவில் தெரியவரும்.

Suresh

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

20 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

20 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

20 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

21 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

21 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

21 hours ago