‘சேயோன்’ படத்துக்குப் பிறகு புதிய கூட்டணியில் சிவகார்த்திகேயன்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்க, பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி வெளியீட்டை நோக்கி படக்குழு பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘சேயோன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் இது தொடர்பான முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முன்னதாக, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். சுதா கொங்கரா இயக்கிய அந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

Suresh

Recent Posts

Ennamo Sonneenga Perusa Lyrical Video

Ennamo Sonneenga Perusa Lyrical Video | James Vasanthan, Gaana Shiva | Dushy, Janany Kunaseelan

15 hours ago

Kaathaaga Vaazhaporen Lyrical Video

Kaathaaga Vaazhaporen Lyrical Video | Magudam | Vishal | GV Prakash | Dushara

15 hours ago

Seppu Sela Video Song

Seppu Sela Video Song | Ram in Leela | Rio Raj | Vartika | Ankit…

15 hours ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: நடிகை ஜியா சங்கருக்கு நிச்சயதார்த்தம்!

'காதல் ரீசெட் ரிப்பீட்' மற்றும் மராத்தி திரைப்படமான 'வேத்' மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஜியா சங்கர், தனது நிச்சயதார்த்தத்தை…

15 hours ago

இதனால் தான் ‘மக்கள் காவலன்’ கதையை தேர்வு செய்தேன் – நடிகர் மணிகண்டன்

'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமாக 'மக்கள்…

15 hours ago

‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

இந்துக்களின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இதில்…

16 hours ago