vijay devarakonda upcoming movie details
இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்துக்கு விஜய் தேவரகொண்டா ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாகவும், லாபத்திலும் பங்கு வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் வசூல் சரிவால் விஜய் தேவரகொண்டா ரூ.6 கோடியை திருப்பி கொடுத்து, லாபத்திலும் பங்கு வேண்டாம் என்று தெரிவித்தாகவும், இயக்குனர் பூரி ஜெகந்நாத்தும் சம்பளத்தில் 70 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
லைகர் படம் எதிர்ப்பார்த்த அளவு வருமானம் ஈட்டாததால் விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்க இருந்த ஜனகன படத்தை கைவிட பட நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்காமல் ஜனகன படத்தில் நடிக்க முன்வந்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்காமல் நடித்தால் படத்தின் பணிகளை திரும்ப தொடர படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…