Categories: NewsTamil News

சுஷாந்த் சிங் போல் நானும் பாதிக்கப்பட்டேன் – வித்யா பிரதீப் வேதனை

தமிழில் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் நடிகையானவர் வித்யா பிரதீப். அதன் பின் விஜய் இயக்கிய சைவம், பாண்டிராஜின் பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். டிவி.சிரியல்களிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு நடிகர், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி கூறியிருந்தனர். இந்நிலையில் வித்யா பிரதீப்பும் தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் பற்றி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது: ‘தடம்’ படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.

admin

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

19 hours ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

20 hours ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

20 hours ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

21 hours ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

21 hours ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

22 hours ago