தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 31ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
திரையரங்குகளில் ரசிகர்களால் தொடர்ந்து வசூல் வேட்டையாடிய இப்படத்தை ரஜினி உட்பட திரைபிரபலங்கள் பலரும் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதன்படி விடுதலை திரைப்படம் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஏப்ரல் 28ஆம் தேதியான இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் திரையில் வெளிவராத கூடுதலான பிரத்தியேகமான காட்சிகளுடன் வெளியாகி உள்ளது. அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.
Witness the uncut, unseen, unbelievable extended version of #ViduthalaiPart1 Director’s cut on zee5tamil premiers on 28th April.#VetriMaaran @ilaiyaraaja @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @BhavaniSre @GrassRootFilmCo @VelrajR @dirrajivmenon pic.twitter.com/u9F3QHKm3q
— ZEE5 Tamil (@ZEE5Tamil) April 27, 2023

