Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வடசென்னை படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்குவது உறுதி : இயக்குனர் வெற்றி மாறன்

vetrimaaran shared vadachennai 2 movie update

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கி பல தேசிய விருதுகளை குவித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதன் வரவேற்பை தொடர்ந்து தற்போது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருந்து வரும் வெற்றிமாறன் இதை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கயிருக்கிறார். இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து இருந்த வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

இது தொடர்பாக பல மேடைகளில் இயக்குனர் வெற்றிமாறனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், வடசென்னை 2 படம் குறீத்து பேசி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், தற்போது விடுதலை 2ஆம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதன்பின் வடசென்னை 2 ஆம் பாகத்தை இயக்குவேன் எனக்கூறி உறுதியளித்துள்ளார். இவரது இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.

vetrimaaran shared vadachennai 2 movie update
vetrimaaran shared vadachennai 2 movie update