வாடிவாசல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கங்குவாவிற்கு காத்திருந்தாலும் ஒரு பக்கம் வாடிவாசல் குறித்த வதந்திகள் பரவி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இது குறித்த வதந்திகளுக்கு வெற்றிமாறன் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வாடிவாசல் கைவிடப்படவில்லை என் வரிசையில் உள்ளது. மேலும் விடுதலை 2 முடிந்த பிறகு வாடிவாசல் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிலால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றன.
