venkat prabhu about thalapathy 68
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. தளபதி 68 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் லியோ படத்திற்கு பிறகு வரும் என்றார்.
மேலும் அவரிடம் சில தினங்களுக்கு முன்பு கங்கை அமரன், விஜய்-அஜித் இணைந்து நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். தளபதி 68-ல் அது நடக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, அது என் அப்பாவின் ஆசை. இப்பொழுதே படத்தை பற்றி எல்லாம் சொல்லி விட்டால் எப்படி. எல்லாம் சஸ்பென்ஸ்தான். லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? என்று தனக்கே உரித்தான பாணியில் கிண்டல் அடித்தார்.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…