varisu movie telugu release latest update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாக சிக்கல்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை வாரிசு திரைப்படத்திற்கு தெரிவித்து வந்தனர். வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது. அதாவது, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் வாரிசு படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும், படத்தின் வெளியீட்டில் எந்த சிக்கலும் இருக்காது என்று அவர்கள் உறுதி அளித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…