தமிழ் சினிமாவில் சந்திரலேகா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் வனிதா விஜயகுமார். மேலும் இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி தன்னுடைய யூடியூப் சேனலுக்கு உதவிக்கு வரும் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் பெரும் விவாதத்துக்கு உள்ளாக்கி வருகிறது. சூர்யா தேவி என்ற பெண் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசி கலாச்சாரத்தை கெடுப்பதாக விமர்சனம் செய்து வந்தார்.
சூர்யா தேவியின் பேச்சு அளவுக்கு எல்லை மீறி போனதால் வனிதா அவருடைய வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவருடன் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இவர் போலீசில் புகார் அளித்த பிறகு பத்திரிகையாளர் சந்தித்தபோது சூர்யா தேவி என்பவர் கஞ்சா தொழில் செய்து வருகிறார். சென்னையில் அவரால் பல குடும்பங்கள் அழிந்து உள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது.
மேலும் அவரது வழக்கறிஞர் பேசும் போது சூர்யா தேவியின் பின்புலத்தில் விஜய் டிவியை தெரிந்த நாஞ்சில் விஜயன் தான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார். இருவரும் கொஞ்சி கொண்ட வீடியோ ஒன்று தங்களிடம் ஆதாரமாக இருப்பதாகவும் அதை இன்று வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் ரவீந்திரன் மீதும் போலிஸில் புகார் அளித்துள்ளார் வனிதா.
இன்னும் ஓரிரு தினங்களுக்குள் சூர்யா தேவியின் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் செய்யும் இந்த கஞ்சா தொழிலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே ஃபேமஸான என்னை டார்கெட் செய்வதாகவும் அதன் பின்னர் இவர்களைப் பற்றி பேசியதால் தான் கஞ்சா வழக்கு போட்டு கைது செய்தார்கள் என கூறுவதற்கும் தான் செயல்பட்டதாக வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் சூர்யா தேவி பேசுவது எல்லாம் மக்கள் நம்ப வேண்டாம் எனவும் வனிதா வேண்டுகோள் வைத்துள்ளார். எனக்கு நாற்பது வயதாகிறது. யாருடைய ஆதரவும் இல்லாமல் இருப்பதால் தான் நான் இந்த திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார் வனிதா.
மேலும் தன்னுடைய மகன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் முதல் கணவர் ஆகாஷுடன் தற்போதும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரைப் பற்றியும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…