Jason Sanjay Talks About His Father Vijay at Sigma Audio Launch
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட், சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், ‘சிக்மா ஸ்டைல்’, ‘அய்யய்யோ அம்மாடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மேலும், படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் மற்றும் கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் ‘சிக்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது, “என்னோட அம்மாவுக்கு நன்றி. என்னோட அப்பா இன்னைக்கு முதலமைச்சர். அவருக்கும் நன்றி. என்னோட தங்கை திவ்யா சாஷாவுக்கும் ரொம்ப நன்றி” என அவர் தெரிவித்தார்.
ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய் குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசியது அரங்கில் கவனம் பெற்றது.
இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து ‘சிக்மா’ படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதலில் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுதல் தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் முடித்துள்ளார். மேலும், சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…