Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வனிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? இணையத்தில் வைரலான லேட்டஸ்ட் புகைப்படம்..

Vanitha Son Sri Hari Latest Photo

தமிழ் சினிமாவில் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தற்போது பிசியாக வலம் வரத் தொடங்கி இருப்பவர் வனிதா விஜயகுமார். திருமண வாழ்க்கையில் மூன்று திருமணங்கள் செய்தும் மூன்றும் தோல்வியை சந்தித்தன.

இவருடைய மகன் ஸ்ரீஹரி முதல் கணவரை விவாகரத்துக்கு பிறகு தன் அப்பாவுடன் இருக்க விரும்புவதாகச் சொல்லி தற்போது வரை அவருடைய அப்பா உடனேயே இருந்து வருகிறார். இவருக்கும் வனிதாவுக்கும் இடையே பெரிய அளவில் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வருகிறது.

மேலும் ஸ்ரீஹரி கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சினிமா சார்ந்த படிப்பை படித்து உள்ள இவர் குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.

மேலும் விரைவில் ஹீரோவாக படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக வனிதாவின் மகன் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

Vanitha Son Sri Hari Latest Photo
Vanitha Son Sri Hari Latest Photo