vamsi-work-in-thalapathy-67 movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தாலும் வம்சி படத்தை எப்படி இயக்குனர் என்ற கேள்வி அனைவர் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் வம்சி செய்யும் செயல்கள் தளபதி விஜயை மிரள வைத்துள்ளது. ஆமாம் ஒவ்வொரு காட்சியும் இப்படித்தான் வரவேண்டும் கேமராவை இங்கு வைத்தால்தான் அழகாக இருக்கும் என சிறு சிறு விஷயங்களையும் திட்டமிட்டு சிறப்பாக செய்து வருகிறாராம்.
வம்சியின் இந்த செயல்பாடுகளால் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டுள்ள தளபதி விஜய் கேரவனுக்கு கூட செல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டிலேயே உட்கார்ந்து அனைத்தையும் கவனிக்கிறாராம். இப்படியான விஷயங்கள் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட அப்படின்னா படம் கண்டிப்பாக பெரிய சக்சஸ் தான் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…