வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் இரண்டாம் பாகம் குறித்து ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ் இந்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதாவது வடசென்னை 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்கப் போவதாகவும் 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறியுள்ளார் இவர் கொடுத்த அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது தனுஷ் நடிப்பில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
