அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்
நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக நடித்திருக்கிறார். கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். சத்யராஜ், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
காதல் கதையை கொண்ட இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் அர்ஜூனிடம் ‘முதல்வன்-2’ படம் உருவாகுமா? என்ற ஆர்வத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் என்ன சொல்லப் போகிறார் எனவும் கேட்டு வருகின்றனர்.


