பராசக்தி படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்ஸ் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
அதாவது இந்த படத்திற்கான முன் பதிவுகள் இந்த வார இறுதியில் தொடங்க இருப்பதாகவும் நாளை ஒரு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்திற்கான ட்ரைலர் வெளியாகும் என்றும் இன்னும் சில நாட்களில் ஆன்லைன் youtube நேர்காணலை பட குழு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Updates about Parashakti movie will be released later

