தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படியான நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பீஸ்ட் பட டிரெய்லருக்கு நாங்களும் வெயிட்டிங் நண்பா என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த புகைப்படத்தில் பூஜா ஹெக்டே உட்பட பலர் உள்ளனர். மேலும் தளபதி விஜய் மாஸான லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Naangalum ungala madhiri #BeastTrailer ku waiting nanba⁰????@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastModeON #Beast #BeastTrailerOnApril2 pic.twitter.com/WpwyrLrUCL
— Sun Pictures (@sunpictures) March 31, 2022

