trish-mansoor-alikhan-case-update viral
“நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறியதோடு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், நடிகராக இருக்கும் ஒரு நபரை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துங்கள் என்று மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார்.இதைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும் படி நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.”,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…