கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’29’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம், விரைவில் திரையரங்குகளை அடைய உள்ளது. இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்தை, White Carpet Films சார்பில் K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

தொடர்ந்து தரமான மற்றும் புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் White Carpet Films, இந்த படத்தின் மூலம் மேலும் ஒரு முக்கிய வெளியீட்டை குறிக்கிறது. முன்னதாக “தேஜாவு”, “வித்தைக்காரன்” போன்ற படங்களை தயாரித்ததுடன், “துணிவு”, “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த அனுபவமும் இந்த நிறுவனத்துக்கு உள்ளது. தயாரிப்பு மற்றும் விநியோக துறைகளில் சமநிலையுடன் வளர்ந்து வரும் நிறுவனமாக இது திகழ்கிறது.

“29” திரைப்படம், கார்த்திக் சுப்புராஜின் Stone Bench மற்றும் லோகேஷ் கனகராஜின் G Squad நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாக உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற தனித்துவமான படங்களை இயக்கிய ரத்னகுமார், இந்த படத்தில் 2000களின் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் விது நாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் “ரெட்ரோ” படத்தில் வில்லனாக கவனம் பெற்ற அவர், இப்போது முழுமையான நாயகனாக புதிய பரிமாணத்தில் ரசிகர்களை கவர உள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2000களின் நினைவுகளையும், அந்த காலத்தின் காதல் உணர்வுகளையும் அழகாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள “29”, வருகிற மே 8, 2026 அன்று தமிழகமெங்கும் வெளியாகிறது. காதல், நினைவுகள், உணர்ச்சி ஆகியவற்றை இணைக்கும் இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு இனிய திரையரங்கு அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

Adada Thiruda Lyrical Video Song

Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…

59 minutes ago

Double Occupancy Official Trailer

Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy

1 hour ago

விஜய்யை பார்க்கும் முன் மகளிடம் சத்தியம் வாங்கிய குஷ்பு!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…

3 hours ago

முழுக்க முழுக்க இசையால் பேசும் சிங் கீதம் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…

3 hours ago

ஓணம் ரிலீஸில் மோதும் முன்னணி மலையாள நட்சத்திரங்கள்!

கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…

3 hours ago

‘பெத்தி’க்கு எழும் எதிர்ப்பு – பெண்களை பொருளாக பாவிக்கிறதா சினிமா?

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…

3 hours ago