“Happy Raj” Premieres on OTT This Week!
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது OTT வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கிய இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தந்தையைச் சுற்றிய சமூக விமர்சனங்களால் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் ஒரு இளைஞன், அதை எவ்வாறு கடந்து தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கண்டடைகிறார் என்பதை, உணர்ச்சியும் நகைச்சுவையும் கலந்த ஜாலியான டிராமா பாணியில் படம் எடுத்துக்காட்டுகிறது.
Beyond Pictures தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், அப்பாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியானபோது கவனம் பெற்ற ‘ஹேப்பி ராஜ்’, வருகிற ஏப்ரல் 24 முதல் பிரபல OTT தளமான Prime Video-வில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், இந்த வாரம் வீட்டிலிருந்தபடியே இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…