Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 24– 12 – 2023

மேஷம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வீடு, மனை, வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும், அசையா சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

ரிஷபம்: இன்று புதிய பொருட்சேர்க்கையும், ஆடை ஆபரணமும் சேரும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல்நலத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்: இன்று புதிய தொழில் தொடங்கவும், பெரிய முதலீடுகளில் விரிவு செய்யவும் ஏதுவான காலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திருப்தியுடன் செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்: இன்று சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்: இன்று பணம் பலவழிகளில் தேடிவந்து சேரும். மனதில் தைரியமும் துணிவும் உண்டாகி எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவச்செலவுகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி: இன்று உற்றார்- உறவினர்களிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் அனுசரித்துச்செல்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். புத்திரவழியில் பூரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்: இன்று கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கடன்கள் பைசலாகும். கூட்டுத்தொழிலில் அபரிதமான லாபத்தை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று பணியில் திருப்தியானநிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

விருச்சிகம்: இன்று செல்வம், செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும். மாணவர்கள் திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு: இன்று எதிலும் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகரம்: இன்று திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்றுத் தள்ளிவைப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் -வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடையமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கும்பம்: இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்துச்செல்வது போன்றவற்றால் அபிவிருத்தி பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்: இன்று எதிர்பாராத திடீர்தனவரவுகள் கிடைக்கப்பெறுவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலையே நிலவும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனமுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

 

admin

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

14 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

14 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

17 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

17 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

18 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

18 hours ago