Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 16– 06 – 2022

மேஷம்: இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9

ரிஷபம்: இன்று பெற்றோகள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

மிதுனம்: இன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3

கடகம்: இன்று நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது. மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சிம்மம்: இன்று எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6

கன்னி: இன்று பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5

துலாம்: இன்று வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்: இன்று எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். மன குழப்பம் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3

தனுசு: இன்று பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7

மகரம்: இன்று எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கும்பம்: இன்று மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 

admin

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

1 day ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

1 day ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

1 day ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

1 day ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

1 day ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

1 day ago