Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 16 – 03 – 2022

மேஷம்: இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் வீண் அலைச்சல் உடல் உழைப்பு ஆகியவை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 9

மிதுனம்: இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

கடகம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரத்து கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:1, 5, 7

கன்னி: இன்று பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை
அதிர்ஷ்ட எண்: 3, 9

துலாம்: இன்று மன தைரியம் அதிகரிக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 6, 9

விருச்சிகம்: இன்று எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். மன நிம்மதியை குலையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7

தனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2,5

மகரம்: இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

கும்பம்: இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

மீனம்: இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

 

admin

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

21 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

21 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

21 hours ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

23 hours ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

23 hours ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

23 hours ago