Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!

''This is the story of Drishyam-3'' - Director Jeethu Joseph Update!

”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!

சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து ஈர்க்கும் என்பதுபோல இதோ ஒரு திரைப்படம் பார்ப்போம்..

கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திருஷ்யம் ரூ.5 கோடி செலவில் தயாரானது. இப்படம் ரூபாய் 75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு கன்னடம்,, இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.

பின்னர், திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது இது நேரடியாக ஓடிடி.யில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதிலும் மோகன்லால் மற்றும் மீனா நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஏப்ரல் 2-ந்தேதி வெளியாகிறது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமைதான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவிக்கையில், ‘இப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளது. இதற்கு மேலும் இந்த கதையை வளர்த்துக் கொண்டே போக எனக்கு விருப்பமில்லை. அப்படி வளர்த்துக் கொண்டே போனால் கவின் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதனால் இப்படம் மூன்றாம் பாகத்துடன் நிறைவடைகிறது’ முன்பு போலவே முதலில் மலையாளத்தில் வெளியிடுவோம்’ என ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

''This is the story of Drishyam-3'' - Director Jeethu Joseph Update!
”This is the story of Drishyam-3” – Director Jeethu Joseph Update!