நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சன் டிவியில் வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தனுஷ் நடித்த #Thiruchitrambalam திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு.#ThiruchitrambalamAudioLaunch #DnA #Dhanush #Anirudh @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar pic.twitter.com/f4bfzlMO3B
— Sun TV (@SunTV) August 1, 2022