There Is No Love in Tamil Cinema Anymore - Jyothika's Remark
தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் நட்சத்திர தம்பதிகளில் ஒருவரான சூர்யா – ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜோதிகாவிடம், தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த், “நீங்களும் சூர்யாவும் மீண்டும் எப்போது இணைந்து நடிக்கப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜோதிகா, “நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க ஒரு நல்ல கதைக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை எங்களை கவரும் வகையில் யாரும் அப்படிப்பட்ட கதையை கொண்டு வரவில்லை. அழகான காதலை மையமாகக் கொண்ட படங்கள் தற்போது மிகவும் குறைந்துவிட்டன” என்றார்.
மேலும், “தமிழ் சினிமாவில் உண்மையான ரொமான்டிக் படங்களை பார்த்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது வெளியாகும் பல படங்களில் காதலை விட காமத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் காதலை அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லும் ஒரு படத்திற்காக நாங்களிருவரும் காத்திருக்கிறோம். அப்படிப்பட்ட படத்தை ஒரு பெண் இயக்குநர் இயக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என ஜோதிகா தெரிவித்தார்.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…