The teaser of Jason Sanjay's 'Sigma' has been released and is receiving a good response from the fans.
ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கிடையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
சில முன்னணி இயக்குநர்களும் அவரை வைத்து படம் இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினர். குறிப்பாக சுதா கொங்கரா, மலையாள சினிமா இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் ஜேசன் சஞ்சயை சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர், இயக்குநராக அறிமுகமாவதில் உறுதியாக இருந்தார். இதற்காக கனடா நாட்டிற்கு சென்று டைரக்சன் சம்பந்தமான கோர்ஸ் முடித்தார்.
இந்நிலையில், லைகா தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அவ்வகையில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்து ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தில் ஃப்ரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் தம்பி ராமைய்யா, ராஜு சுந்தரன், சம்பத்ராஜ், அன்புதாசன், யோக் ஜெபி உள்பட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் ‘சிக்மா’ டீசர் வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு அறிவித்த நிலையில், தற்போது இந்த டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
சிக்மா’ படம் அதிரடி ஆக்சன் படம் என்பது டீசர் மூலமாக தெரிகிறது. பணக்கடத்தல், அதனைச் சுற்றி நடக்கும் கதைக்களமாக எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டைலிஷான மேக்கிங்கும், வசனமும் டீசரில் இடம் பெற்றுள்ளது. இப்படம், கமர்ஷியல் ஜானரில் உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…