விரைவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’: இயக்குநர் பொன்ராம் தகவல்

விரைவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’: இயக்குநர் பொன்ராம் தகவல்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் பொன்ராம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′ படத்திற்கான அப்பேட் கொடுத்துள்ளார். அதாவது, ‘நான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 2-ம் பாகத்தை நிச்சயம் எடுப்பேன். அது சவாலான விஷயமும் கூட. அப்படத்தை எடுக்க முடியாது என பலர் கூறுகின்றனர். எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்’, என கூறியுள்ளார்.

இவர் தற்போது, சரத்குமார், சண்முகப் பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தற்போது அவர் அமரன், மதராசி, பராசக்தி என மாஸ் ஹீரோவாக வளர்ந்துள்ளார். இச்சூழலில் மீண்டும் பொன்ராமுடன் கூட்டணி உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

‘Varthapada Vaalibar Sangam 2’ coming soon: Director Ponram announces
dinesh kumar

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

1 day ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

1 day ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

1 day ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

1 day ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

1 day ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

2 days ago