‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் பேச்சு

‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் பேச்சு

விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள ‘சிறை’ படத்தை ‘டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார்.

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இச்சூழலில் சுரேஷ் ராஜகுமாரி தெரிவிக்கையில்,

‘இது உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே எடுத்துக்கொள்ளும் என்பார்கள். இப்படத்திலும் அது தான் நடந்தது. தயாரிப்பாளர் லலித் சார், வெற்றிமாறன் அசிஸ்டென்ட் என்றால் ஓகே என்றார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன்.

ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். இக்கதாபாத்திரத்துக்காக விக்ரம் பிரபு உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்‌ஷய் கதைக்குள் வந்து, இக் கதாபாத்திரத்துக்காக மிக கடினமாக உழைத்தார். நான் வீட்டில் இருந்ததை விட வெற்றிமாறன் சாருடன் இருந்ததுதான் அதிகம். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்’ என்றார்.

படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அருண் விஸ்வா, சுரேஷ் காமாட்சி, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, வெற்றிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Vikram Prabhu’s dedication in the film ‘Sirai’: Director Suresh Rajakumar speaks
dinesh kumar

Recent Posts

Modha Rathri Official Trailer

Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar

4 hours ago

Ayyayo Ammaadi Lyrical Video

Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…

4 hours ago

Irumudi Official Tamil Trailer

Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…

4 hours ago

Manamae Pogumo Lyrical Video

Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…

4 hours ago

Pyaar Prema Kalyanam Official Trailer

Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India

4 hours ago

கழுத்தில் அறுவை சிகிச்சை… அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஷகீலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…

6 hours ago