கருவேப்பிலை ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கருவேப்பிலை ஜுஸ் செய்ய முதலில் கருவேப்பிலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பிறகு அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து குடித்து வர வேண்டும்.
முக்கிய குறிப்பாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு உடற்பயிற்சி மற்றும் டயட்டுகள் இருப்பது வழக்கம். ஆனால் நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கும் கருவேப்பிலை ஜுஸ் குடித்தால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் இந்த ஜுஸ் குடிக்கலாம்.
குறிப்பாக இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.எனவே ஆரோக்கியம் தரும் கருவேப்பிலை ஜுஸ் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.