the-legend movie review
விஞ்ஞானியாக இருக்கும் சரவணன், பல சாதனைகளை செய்து உலகநாடுகளை அசரவைக்கிறார். அதன்பின், தனது சொந்த ஊருக்கு சென்று தன்னுடைய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். தனது தாத்தா உருவாக்கிய கல்லூரியை எடுத்து நடத்தும் சரவணன், ஊரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைக்கிறார்.
இந்நிலையில் சரவணனின் நண்பரான ரோபோ சங்கர், சர்க்கரை நோயால் இறந்து விடுகிறார். இதனால் வருந்தும் சரவணன், சக்கரை நோயை குணப்படுத்தும் மாற்று வழியை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். இதற்கு பல தடவைகளும் இன்னல்களும் சரவணனுக்கு வருகிறது. இறுதியில் சரவணனுக்கு வந்த பிரச்சனை என்ன? பிரச்சனைகளை கடந்து சர்க்கரை நோய்க்கு மாற்று மருந்தை சரவணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
அறிமுக படத்திலேயே மக்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார் சரவணன். ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்திலும் தனது முயற்சியை நூறு சதவீதம் கொடுத்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சியில் மாஸ் காண்பித்துள்ளார். நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் விவேக்.
சரவணனுக்கு மனைவியாக நடித்து இருக்கும், கீத்திகா திவாரி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். அழகான வில்லியாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் ஊர்வசி. வழக்கமான வில்லத்தனத்தை கொடுத்து இருக்கிறார் சுமன். ரோபோ சங்கர் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
மெடிக்கல் மாஃபியாவை படத்தை இயக்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜெடி – ஜெரி. மெடிக்கல் மாஃபியா கதையை வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படம் அதிலும் தனித்துவமாக அமைத்திருக்கிறார்கள். விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை, கலர்ஃபுல்லான பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
சரவணனின் அண்ணனாக வரும் நடிகர் பிரபு, தந்தையாக வரும் விஜயகுமார், விஞ்ஞானி நாசர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் யோகி பாபு.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் மனதை தொடுகிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவு மற்றும் அனல் அரசின் சண்டை படத்திற்கு பலம்..
மொத்தத்தில் ‘தி லெஜண்ட்’ கிரேட்.
ரவி மற்றும் ஸ்ருதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…