the first look of Appa Kutty
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பல்வேறு பொறுப்புகளையும் அவர் ஏற்றுள்ளார்.
தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை பார்க்கும்போது, தந்தை – மகள் பாச உறவை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதைக்களத்தில் படம் உருவாகியிருப்பது தெரிய வருகிறது.
இந்தப் படத்திற்கு‘அப்பா குட்டி’** என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ப்ரீத்தி அஸ்ரானி, ஹரிப்ரியா, அருவி மதன், முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
‘அப்பா குட்டி’ படத்தைத் தொடர்ந்து, ‘அயோத்தி’ புகழ் இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். அந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகள்…
நடிகர் ஜீவா தனது அடுத்த திரைப்படத்திற்காக மலையாள இயக்குநர் முகமது முஸ்தஃபாவுடன் கைகோர்த்துள்ளார். தற்காலிகமாக ‘ஜீவா 49’ எனப் பெயரிடப்பட்டுள்ள…
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் நடிகை சாய்…
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது 14 ஆண்டுகால காதலரான இசயா நட்டரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது…
Mangala Vanname Video Song | Ramayana | Namit M, Nitesh T | AR Rahman, Abhay…