சிரஞ்சீவியின் ‘Mega 158’ படப்பிடிப்பு துவக்கம்!.. கிளாப்படித்த பவன் கல்யாண்

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவரது தம்பியும், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண், முதல் காட்சிக்கான கிளாப்பை அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

‘வால்டேர் வீரய்யா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பாபி கொல்லி மற்றும் சிரஞ்சீவி மீண்டும் இணையும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்காக சிரஞ்சீவி புதிய தோற்றத்தில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் மகளாக நடிக்கிறார். மேலும் பிரியாமணி கதாநாயகியாக நடிக்க, இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்த மாஸ் ஆக்ஷன் திரைப்படம், 2027 சங்கராந்தி வெளியீட்டை இலக்காகக் கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

Suresh

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

15 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

15 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

15 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago