Suriya’s ‘Seance’ Set for Diwali Release on November 6
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் புதிய கவுண்ட்டவுன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியாகியுள்ள போஸ்டரில், உடைந்து சிதறிய அறையில் மர நாற்காலியில் அமர்ந்தபடி கையில் துப்பாக்கியுடன் சூர்யா ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நீண்ட தலைமுடி, தாடியுடன் அவர் தோன்றும் இந்த மாறுபட்ட தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், லால், ஆனந்தராஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஆவேசம்’ படத்தின் இசையால் கவனம் ஈர்த்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான ‘ஆத்தி இவ யாரா’ பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜித்து மாதவனின் டார்க் காமெடி மற்றும் ஆக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இப்படம், தீபாவளி வெளியீடாக ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…