Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினியை இயக்கும் ‘டிராகன்’ இயக்குநர்

The director of 'Dragon', who is directing Rajinikanth

ரஜினியை இயக்கும் ‘டிராகன்’ இயக்குநர்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. இதற்காக பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவந்தார். அதில் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. ஆனால், தற்போது ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. ரஜினி-அஸ்வத் மாரிமுத்து சந்திப்பு இதுவரை 5 முறை நடந்துள்ளது. இறுதியாக நடைபெற்ற சந்திப்பில் அவர் கூறிய இறுதிக் கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக ஒகே சொல்லியிருக்கிறார் ரஜினி. இதனால் பரபரப்பாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

‘தலைவர்-173 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்

The director of 'Dragon', who is directing Rajinikanth
The director of ‘Dragon’, who is directing Rajinikanth