தண்டட்டி திரை விமர்சனம்

தேனி மாவட்டத்தில் கிடாரிப்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மூதாட்டியான ரோகிணி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ரோகிணி காணாமல் போய்விடவே அவரை கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம் புகாரளிக்கப்படுகிறது. போலீசான பசுபதி, மூதாட்டி ரோகிணியை தேடிக்கண்டு பிடிக்கிறார். ஆனால், உடல் நலப்பிரச்சினையால் அவர் இறந்து விடுகிறார். பின்னர் ரோகிணியின் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. அப்போது பேராசை பிடித்த பிள்ளைகள் தாய் இறந்த கவலை கூட இல்லாமல் அவர் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால், திடீரென்று அந்த தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. இறுதியில் ரோகிணி எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்? தண்டட்டி எப்படி காணாமல் போனது? பசுபதி தண்டட்டியை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பசுபதி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிராம மக்களிடம் மாட்டிக் கொண்டு அலைக்கழிக்கப்படும் காட்சிகள் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெறுகிறது. முழுப்படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார் பசுபதி. மூதாட்டியாக நடித்துள்ள ரோகிணி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். பிணமாக நடித்துள்ள காட்சிகள் கவனத்தை ஈர்க்கிறது. அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா பூவிதா, தீபா சங்கர், ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோர் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் ராம் சங்கையா தண்டட்டி பின்னால் இருக்கும் கதையை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். வலுவான திரைக்கதை மூலம் அவரது உலகிற்கு நம்மையும் அழைத்து செல்கிறார். எதார்த்தமான கிராமத்து கதையை மண் மணம் மாறாமல் இயக்கியுள்ளார். ஒரு சில இடங்களில் காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை. கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கிராமத்து எழிலை தன் ஒளிப்பதிவு மூலம் மிகவும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. மொத்தத்தில் தண்டட்டி – மினுக்கிறது.

thandatti movie review
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

8 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

8 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

9 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

9 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

10 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

1 day ago