பாக்யா எடுத்த முடிவு. கோபத்தில் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தால் வீட்டை விட்டு கிளம்பி போய்டுவீங்களா பதில் சொல்லுங்க என கேட்க கோபி முதல்ல பணத்தை கொடு அதுக்கப்புறம் பார்க்கலாம் என்று சொல்ல அதெல்லாம் கிடையாது பணத்தை கொடுத்தால் கிளம்பிருவீங்களா? என்று கேட்க கோபி சேனலஞ் அக்செப்டட் என சொல்கிறார் ‌

உடனே பாக்யா இன்னும் ஒரு மாசத்துல 18 லட்ச ரூபாய் பணத்தை இதே இடத்தில உங்க முகத்துல தூக்கி எறியறேன் அதுக்கப்புறம் உங்களுடைய ரிலேட்டிவை கூட்டிக்கிட்டு கிளம்பிட்டே இருக்கணும் என சவால் விடுகிறார். பாக்யாவின் சவாலை கேட்ட ராதிகா விழி பிதுங்கி நிற்கிறார்.

பிறகு கோபி ராதிகாவை கூட்டிக்கொண்டு மேலே செல்ல பாக்கியா ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறார். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அத்தை இன்னும் ஒரு மாசத்துல அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துட்டா இது முழுக்க முழுக்க நம்ப வீடு ஆயிடும், யாரும் நம்மள வீட்டை விட்டு வெளியே போக சொல்ல முடியாது என சொல்கிறார். ஜெனி நான் வேணும்னா அப்பா அம்மா கிட்ட பணம் கேட்கவா என்று சொல்ல பாக்கியா அதற்கு மறுப்பு தெரிவிக்க ராமமூர்த்தி என்னுடைய பென்ஷன் பணத்தை எடுத்து விடலாம் என்று சொல்ல அது உங்களுடைய பணம் நீங்க சேர்த்து வைத்த பணம் அதை எடுக்க வேண்டாம் மாமா ஒரு மாசம் டைம் இருக்குல்ல பார்க்கலாம் என்று சொல்கிறார்.

ஒரு மாசத்துல பணம் எப்படி கிடைக்கும் என ஈஸ்வரி கேள்வி கேட்க அதெல்லாம் எனக்கு தெரியல ஆனா நாம பணத்தை கொடுத்தாகணும், எப்படி பணத்தை ஏற்பாடு பண்ண போறேன்னு தெரியல ஆனா கொடுத்துடுவோம் என்ற நம்பிக்கை மட்டும் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு என சொல்கிறார்.

ராதிகா தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து பாக்யாவின் சவால் பற்றி சொல்ல அவர் அதெல்லாம் அவளால கொடுக்க முடியாது, ஒரு மாசத்துல அவ இந்த வீட்டை விட்டு போயிடுவா அவளோட சேர்ந்து அந்த குடும்பமும் கிளம்பி போயிடும் நீ மாப்பிள மயூரா மட்டும் அந்த வீட்டில் சந்தோஷமா இருங்க என சொல்லிக் கொண்டிருக்க கோபி வருவதால் ராதிகா ஃபோனை வைத்து விடுகிறார்.

கோபி ஒரே டென்ஷனா இருக்கு என்னால முடியல எப்ப பாத்தாலும் சண்டை, சவால்னு போருக்கு நிக்கிற மாதிரி இருக்கு என புலம்ப ராதிகா நான் ஒன்னும் சண்டை போடல அமைதியா தான் இருந்தேன் உங்க அம்மா தான் சண்டை என பிரச்சனை பண்றாங்க என்று சொல்கிறார். இருந்தாலும் நீ அவங்க கிட்ட கொஞ்சம் அமைதியா பேசி இருக்கலாம் என்று சொல்ல நானும் எவ்வளவு நேரம் தான் பொறுமையா இருக்கிறது என ராதிகா கோபப்பட சரி அமைதியா இரு, என்னை ஒரு அஞ்சு நிமிஷம் தனியாக விடு என சொல்ல ராதிகா எழுந்து வெளியே வந்து விடுகிறார்.

இன்னொரு பக்கம் செழியன் நடந்த விஷயங்களை நினைத்து வருத்தப்பட அப்போது மாலினி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்க செழியன் என்ன விஷயம் என்று கேட்க அவர் இம்பார்ட்டண்ட் விஷயம் உடனடியாக பார்க்க வேண்டும் என சொல்ல இப்போதைக்கு முடியாது நாளைக்கு பாக்கலாம் என போனை வைத்து விடுகிறார். இருந்தாலும் மாலினி விடாமல் போன் செய்ய ‌ ஜெனி எடுத்து பேசு என்னன்னு கேளு என்று சொல்ல திரும்பவும் மாலினி செழியனை பார்க்க வேண்டும் என சொல்ல சரி வரேன் என கிளம்பி செல்கிறார்.

பிறகு அமிர்தாவும் எழிலும் ஊரிலிருந்து வீட்டுக்கு வர இனியா சோகமாக இருப்பதை பார்த்து எழில் என்னவென்று கேட்க பாக்யா வந்ததும் எல்லாத்தையும் சொல்லனுமா எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல என்ன ஆச்சு என்று கேட்க இனியா நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல எழில் அவருக்கு இருக்கு என கோபப்பட்டு எழுந்து செல்ல பாக்யா தடுத்து நிறுத்தி 18 லட்சம் ரூபாய் பணத்தை ஒரே மாதத்தில் கொடுத்து விடுவதாக சொன்ன விஷயத்தை சொல்கிறார். எழில் நானும் என் தரப்பில் ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா என்று பார்க்கிறேன். அவர் முகத்தில் பணத்தை விட்டு எறிஞ்சு வெளியே அனுப்பிடனும் அதோட அவர் முகத்திலேயே முழிக்க கூடாது என சொல்கிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 24-06-23
jothika lakshu

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

2 days ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

2 days ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

3 days ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

3 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

3 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

3 days ago