சிறு வயதில் சுனைனா தனது தந்தையை இழந்து விடுகிறார். சமூக போராளியான அவரின் தந்தையை சில கொலை செய்து விடுகின்றனர். இதனால் யாரும் இல்லாது வாழ்ந்து வரும் சுனைனாவுக்கு ஆனந்த நாக்குடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார். இவர் வங்கி ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். அப்போது கொள்ளையர்கள் சிலரால் ஆனந்த் கொடூரமாக கொல்லப்படுகிறார். பல்வேறு இழப்புகளை சந்தித்து பிறகு வாழ்வில் அழகான வாழ்க்கையை தொடர்வதற்குள் காதல் கணவர் ஆனந்தின் இழப்பு சுனைனாவை பாதிக்கிறது. தனது கணவரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாததால் தனது இழப்பை சரி செய்ய சுனைனாவே களத்தில் இறங்குகிறார்.

தனது அப்பாவின் நண்பர்களுடன் சேர்ந்து பழிதீர்க்க முயற்சி செய்கிறார். இறுதியில் சுனைனா அவர்களை பழிதீர்த்தாரா? இதற்காக அவர் கையாளும் யுக்திகள் என்ன? ஆனந்த் கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன? என்பதே மீதிக்கதை. போல்டான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார் சுனைனா. கதைக்கு தேவையான காட்சிகளில் யோசிக்காமல் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. சுனைனாவின் கணவராக வரும் ஆனந்த் நாக் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்திருக்கிறார். படத்தில் தோன்றும் நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, சாய் தீனா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.

பழிவாங்கும் கதையை த்ரில்லர் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இயக்குனர் டொமின் டி செல்வா. இழப்புகளை சந்திக்கும் நாயகி பழிவாங்க கிளம்புவார் என்று எளிதாக யூகிக்க முடிந்தாலும் அதில் சில முயற்சிகளை செய்திருக்கிறார் இயக்குனர். இருந்தும் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் தேவையற்ற காட்சிகள் இடம்பெற்று ஸ்வாரசியத்தை குறைக்கிறது. கதைக்கு தேவையான பங்களிப்பை ஒளிப்பதிவாளர் பவி கே பவன் செய்திருக்கிறார். சதீஷ் நாயரின் பின்னணி இசை படத்திற்கு உதவியிருக்கிறது. சில பாடல்கள் மனதில் நிற்கிறது. மொத்தத்தில் ரெஜினா – புதிய முயற்சி

regina movie review
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

9 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

9 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

9 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

9 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

10 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

1 day ago