Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. விஜய் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்.!

thalapathy vijay upcoming movie update

விஜய் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் நாளை வெளியாக இருந்தது ஆனால் சென்சார் விவகாரத்தால் இந்த திரைப்படத்தை தேதி குறிப்பிடாமல் படக்குழு தள்ளி வைத்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டு இருந்தனர்.

இது ஒரு புறம் இருக்க விஜயின் கடைசி படம் தான் ஜனநாயகன் என எதிர்பார்த்த நிலையில் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வேல்பாரி என்ற படத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று மாதத்திற்கு முன்பு வேல்பாரியை எழுதிய சு வெங்கடேசன் அவர்கள் பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் விஜயை சந்தித்து பேசி உள்ளதாகவும் இந்த படத்திற்காக விஜய் இதுவரை யாரும் வாங்கிடாத இமாலயா அளவு சம்பளத்தை வாங்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் சங்கருக்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சங்கரும் சந்தித்து இது குறித்து பேசி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் இணையும் இந்த கூட்டணியின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது ஜனநாயகன் தான் கடைசி படம் என்று வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் குறித்து வெளியான தகவல் அவர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

thalapathy vijay upcoming movie update

thalapathy vijay upcoming movie update