Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் உணர்ச்சிபூர்வமான பேச்சு.!!

thalapathy vijay speech for jananayagan audio launch

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிரடியாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார் அவரது குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் அவர் இசை வெளியீட்டு விழாவில் சில அதிரடியான விஷயங்களையும் உணர்ச்சிபூர்வமான உரையையும் கொடுத்துள்ளார். வழக்கம்போல் என் நெஞ்சில் குடியிருக்கும் எனத் தொடங்கி வணக்கம் நல்லா இருக்கீங்களா என்ற வாசகத்துடன் உரையைத் தொடங்கிய அவர் மலேசியாவிற்கும் அவருக்கும் ஆன உறவை நிகழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.

தமிழர்கள் எங்கு சென்றாலும் கடின உழைப்பாளர் அந்த மண்ணை சந்தோஷப்படுத்துவார்கள் என்றும் மலாய் மக்கள் காவடி எடுப்பதையும் சீனர்கள் தமிழ் பேசுவதை கண்டும் வியப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சினிமா என்ற பெரிய கடலில் ஒரு சிறிய மணல் வீடு கட்டத் தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு அரண்மனையை கட்டிக் கொடுத்திருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். எனக்காக எல்லாத்தையும் விட்ட என் ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன் அடுத்த 30-33 ஆண்டுகள் மக்களோடு தான் நிற்க முடிவு செய்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு அடுத்து அனைவரும் எதிர்பார்த்த குட்டி ஸ்டோரி..

ஒருவரிடம் இருந்து கைமாறி போய் மீண்டும் அவரிடமே வந்தடையும் ஒரு கொடையைப் பற்றி ஒரு ஸ்டோரியை சொல்லி உங்களால் முடிந்தவரை நன்மை செய்யுங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும் பழிவாங்குவதை விட மன்னிப்பதை தேர்ந்தெடுங்கள் இது இலவசமான அறிவுரை தான் பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவரது குட்டி ஸ்டோரியை முடித்துள்ளார்.

படக்குழுவினரை பாராட்டியவர் பிறகு விஜய் தனியாக வருகிறாரா? கூட்டமாக வருகிறாரா?என்ற கேள்விக்கு விஜய் எப்போதும் சிங்கிள் கிடையாது 33 வருடங்களாக மக்களோடு தான் இருக்கிறேன். 2026 இல் சரித்திரம் திரும்பும் அதற்கு தயாராக இருங்கள் என்று அரசியல் அதிரடி பேச்சுடன் உரையை நிறைவு செய்துள்ளார்.

இவரின் இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சும் அதிரடியான உறையும் ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.

thalapathy vijay speech for jananayagan audio launch
thalapathy vijay speech for jananayagan audio launch