Telugu Actors Consult on Theater Ticket Prices
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்டோர் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தனர்.
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்து சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்தார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் விலையை குறைத்ததற்காக மாநில அரசைக் கண்டித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர ஐகோர்ட், மாநில அரசுக்கு தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து சினிமா திரையரங்குகளில் கட்டண நிர்ணயம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து அந்த குழு, ஆந்திராவில் திரைப்பட டிக்கெட் விலையை அதிகரிப்பதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என ஒளிப்பதிவு துறை மந்திரி வேங்கடராமையா நேற்று தெரிவித்தார். மேலும், அவர் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியுடனான நேற்றைய சந்திப்பின் போது, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச டிக்கெட் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், திரையரங்க உரிமையாளர்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிலையில், இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்டோர் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தனர். அவர்களுடன் முன்னணி இயக்குனர்களான ராஜமவுலி, கொரட்டல சிவா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
அவர்கள் அனைவரும் விமானத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, ஜனவரி 12ந்தேதி அன்று முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக அவருடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…