ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யாவும் விவேகம் ஆபிசுக்கு சென்று கொண்டிருக்க வழியில் ரஞ்சித் பேக்குடன் வெளியில் வருவதை கவனித்து சூர்யா அதிர்ச்சி அடைகிறார். ரஞ்சித் ஆட்டோவில் சென்று விட சூர்யாக்கு சென்று விடுகிறார். சுந்தரவல்லி இடம் வந்து ஹரிதா நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க நம்ம ஆபீஸ்க்கு போகலாம் நானும் கம்பெனியை பார்த்த மாதிரி இருக்கும் என்று சொல்ல, சரி நீ சொல்றதும் சரிதான் இன்னைக்கும் மீட்டிங் இருக்கு போகலாம் என்று முடிவு எடுக்க ஹரிதாவின் அம்மா அப்பாவும் நாங்களும் வருகிறோம் என்று சொல்ல அனைவரும் கிளம்புகின்றனர். சுந்தரவல்லி குடும்பத்தினருடன் கம்பெனிக்கு வர அனைவருக்கும் சுத்தி காட்டுகிறார். தற்போது நந்தினி சிஇஓ என்ற ரூம் பார்த்து ஹரிதா கடுப்பாகி சேரில் ஏறி அந்த போர்டை கழட்டி குப்பையில் போட்டு விடுகிறார். சுந்தரவல்லி எதற்காக இந்த வேலை அவன் வந்தால் ஏதாவது சொல்லுவான் என்று சொல்ல, அவன் என்ன வேணா சொல்லட்டும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து சூர்யாவும் விவேக்கும் வர, சூர்யா நேம் போர்டு கவனித்து ரிமூவ் பண்ணது யாரு என்று கேட்க, அந்த குப்பைத்தொட்டியில் இருக்கு அதுவா பாரு என்று சொல்ல, உடனே சூர்யா உங்க அப்பா வீட்டு கம்பெனியா என்று உச்சகட்ட கோபப்பட்டு திட்டுகிறார். போர்டு இல்லாத அப்பவே உனக்கு இவ்வளவு கோபம் வருதே போர்டு பார்க்கும் போது ஆன்ட்டிக்கு எவ்வளவு கோபம் வரும் என்று கேட்கிறார்.

இது என்னோட கம்பெனி நான் என்ன வேணா பண்ணுவேன் நீ யாருடி கேக்குறதுக்கு என்று சொல்லுகிறார். இது கஷ்டப்பட்டு எங்க ஆண்டி உருவாக்கின கம்பெனி நீ சொந்தமா உருவாக்கி உன்னோட பொண்டாட்டிய சிஇஓ ஆக்கிக்கோ அதுவும் இல்லாம என்று அங்கிருப்பவர்களை கூப்பிட்டு நீங்க எல்லாம் என்ன படிச்சு இருக்கீங்க என்று கேட்க அனைவரும் அவர்கள் படிப்புகளை சொல்ல பார்த்தியா உன் பொண்டாட்டிக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்கிறார். முடிஞ்சா உன் முட்டாள் பொண்டாட்டிய படிக்க வைத்து சிஇஓ ஆக்கு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சூர்யா ரூமுக்கு வந்து எல்லாம் டாடிக்காக தான் அமைதியா இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க விவேக் ஏற்கனவே நந்தினி படிக்க வைக்கிறதா சொல்லிக்கிட்டு இருந்த இப்போ என்ன ஆச்சு என்று சொன்ன அதுக்குள்ள வேற வேற பிரச்சனை வந்துடுச்சு என்று சொல்லி இதுக்கு மேல விடக்கூடாது என நந்தினிக்கு போன் போடுகிறார். என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க வாஷிங் மெஷின்ல போட துணி எடுக்கிறேன் என்று சொல்ல உன்னை இதெல்லாம் பண்ண வேணாம்னுதானே சொன்னேன் என்று கோபப்படுகிறார் பிறகு நீ எந்த சப்ஜெக்ட்ல ஃபெயில் என்று கேட்க இங்கிலீஷ் என்று சொன்னவுடன் சரி ஃபோனை வை என்று சொல்லிவிட்டு விவேக்கிடம் சூர்யா பேச சரி நான் கண்டிப்பா செய்து விடுகிறேன் என்று சொல்லி சென்று விடுகிறார்.

ஹாலில் அசோகன் சுரேகா மாதவி மூவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க ரஞ்சித் அவர்களைப் பார்த்துவிட்டு வெளியில் சென்று விட பிறகு பின்னால் வழியாள் வந்து பேகை ரூமில் வைத்துவிட்டு யாருக்கும் தெரியாதது போல் வீட்டுக்குள் வந்து ரூமுக்கு போவதாக சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்து சாப்பிடச் சொல்ல அந்த நேரம் பார்த்து சூர்யா வந்து ரஞ்சித் இடம் என்ன ரஞ்சித் டூரிஸ்ட் பேக் எல்லாம் வாங்குன போல என்று கேட்க நான் எதுவும் வாங்கலையே என்று சொல்லுகிறார் நான் தான் பார்த்தேனே பொய் சொல்லாதே என்று சொல்ல நீ குடிபோதையில் சொல்லாத என்று வெறுப்பேற்றுகிறார். அப்போ ரூம்ல காட்டு என்று சொல்ல ரூமில் அந்த பேக் இருக்க இந்த பேக் தான் என்ற சூர்யா சொல்ல மாதவியின் சுரேகாவும் அவரை இது வெளிநாட்டிலிருந்து வரும்போது எடுத்துட்டு வந்தார்கள் என்று சொல்ல ஆனால் அதை யாரும் நம்ப மறுக்கின்றனர் உடனே சூர்யா டென்ஷன் ஆகி ரூமில் வந்து கோபப்பட்டு நடந்த விஷயத்தை நந்தினியுடன் சொன்ன நீங்களும் நல்லா பாத்தீங்களா என்று கேட்க சூர்யா இன்னும் கோபப்படுகிறார். நீங்க சொல்றதும் சரிதான் என்று சொல்ல சரி இந்த பிரச்சனையை விடு என்று சொல்லிவிட்டு கம்பெனியில் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு விஷயமா விடுங்க என்று சொல்ல எல்லா இடத்திலும் நீ எதுக்கு பொறுத்துக்கிட்டு போறே என்று கேட்கிறார். அவங்களுக்கு ஈக்குவல்லா நீ படிச்சே ஆகணும் அன்பு அறிவும் ஒரே மாதிரி இருக்கணும் இப்ப படிக்க சொன்னா எப்படி என்று கேட்க, அவங்களுக்கு ஈகுவல்லா நீ படிச்சி டிகிரி வாங்கி ஆகணும் இதுல எந்த மாற்றமும் கிடையாது நான் போய் பிரஸப் ஆகிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரஞ்சித் எழுந்து வந்து கிச்சனில் செருப்பை தேட அந்த நேரம் பார்த்து கல்யாணம் எழுந்து கிச்சனுக்கு வருகிறார். உடனே ஞாபகம் வந்து மீண்டும் படுத்து விடுகிறார். அங்கிருந்து ரஞ்சித் வெளியில் வந்து சூரியா நந்தினி ரூமுக்கு வந்து நந்தினி கழுத்தில் துணியை இறுக்கி கொல்ல முயற்சி செய்கிறார். இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.


moondru mudichu serial episode update
jothika lakshu

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

5 days ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

5 days ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

5 days ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

6 days ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

6 days ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

6 days ago