siragadikka asai serial episode update 13-03-26
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யாவின் காதல் குறித்து தெரிந்து கொண்ட முத்து நீ தைரியமா லவ் பண்ணு என்று சொல்ல மீனா அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகுமா என்று கேட்கிறார் அவங்க வசதியா இருக்கிறவங்க என்று சொல்ல காதல் வசதி எல்லாம் பார்க்காத மீனா அவனுக்கு புடிச்சிருந்தா உங்க ரெண்டு பேர் லவ் பண்ணட்டும் என்று சொல்லி சத்யாவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார் மறுபக்கம் விஜயா வீட்டில் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க அண்ணாமலை வருகிறார் நீங்க வந்து உட்காருங்க அவங்க வர டைம் ஆயிடுச்சு என்று சொல்ல நீ உண்மைய சொல்லிட்டு அதுக்கப்புறம் எந்த விஷயம் வேண்டுமானாலும் செய் என்று சொல்ல நான் மனோஜ்க்கு நல்லது தான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பெண் வீட்டார் வந்து விடுகின்றனர்.
விஜயா அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறார் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் எங்க பையன் மனோஜ் நீங்க பாத்துருங்க என்று சொல்ல விஜயா மனோஜை கூப்பிடுகிறார் அப்போது கோர்ட்டு போட்டுக் கொண்டு மனோஜ் வந்து நிற்க அவர்களுக்கு மனோஜை பிடித்து விடுகிறது உடனே எங்களுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கு என்று சொல்ல உடனே விஜயாவும், மனோஜ் சந்தோஷப்படுகின்றனர் அண்ணாமலை நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் எங்களுக்கு மூணு பசங்க பெரிய பையன் மனோஜ் இரண்டாவது பையன் முத்து மூணாவது பையன் ரவி இவங்க வெளியே வேலைக்கு போய் இருக்காங்க அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அவங்க பொண்டாட்டி அம்மா வீட்டுல இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே விஜயா நீங்களே எதுக்கு பேசிகிட்டு இருக்கீங்க அவங்கள பேச விடுங்க என்று தடுக்க பெண் வீட்டார் அவர் பேசட்டும் விடுங்க என்று சொல்லுகிறார் அது உடனே அண்ணாமலை அதைவிட ஒரு முக்கியமான விஷயம் இருக்கு அது என்னன்னா மனோஜ்க்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு அவனுக்கு டைவர்ஸ் கிடைக்க ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு என்று சொல்ல விஜயாவும் மனோஜ் அதிர்ச்சி அடைகின்றனர்.
கல்யாண பெண்ணின் அப்பா அம்மா இருவரும் கொஞ்ச நேரம் அவர்களுக்குள்ளே பேசிவிட்டு எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல எங்க பொண்ணுக்கும் தோஷம் இருக்கிறதுனால இப்படி ஒரு வரம் வரதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். நீங்க நாளைக்கு வந்து பொண்ணு பாத்துட்டு வந்துருங்க என்று சொல்ல விஜயா சந்தோஷப்பட, அவர்கள் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர் அவர்கள் கிளம்பிய பிறகு அண்ணாமலை இடம் உங்கள இதெல்லாம் கேட்டாங்களா எதுக்கு இப்படி சொல்லிட்டு இருக்கீங்க என்று கேட்க உண்மையை மறைத்ததுனால இவ்வளவு பெரிய பிரச்சனை நம்ம வீட்ல வந்ததுன்னு தெரிஞ்சுகிட்டு திருப்பி மறைக்கிறது தப்பு இப்போ உங்க சந்தோஷமா போறாங்க இதுதான் முக்கியம் என்று அண்ணாமலை சொல்லுகிறார். மறுபக்கம் சத்யாவின் வருகைக்காக ஹோட்டலில் ரேகா காத்துக் கொண்டிருக்க சத்யா வந்து உட்காருகிறார் இன்னைக்கு என்னோட பர்த்டே சத்யா ஆனா எனக்கு தான் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு நீ என்ன சொல்ல போறன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லுகிறார்.
இதுக்கு மேல என்ன வெயிட் பண்ண சொல்லாத என்று சொல்ல சத்தியா ஒரு ரோஸ் எடுத்து கொடுத்து லவ் யூ ரேகா என்று சொல்ல ரேகா சந்தோஷப்படுகிறார் பதிலுக்கு அவரும் அவரது காதலை வெளிப்படுத்த அந்த நேரம் பார்த்து சிந்தாமணியின் போன் வருகிறது சத்யா தனியாக சென்று பேச எங்க இருக்கீங்க என்று கேட்கிறார் நான் வெளியே இருக்கேன் பிரண்டோட இருக்கேன் என்று சொல்ல என்ன பிரண்டு பொண்ணா பையனா என்றெல்லாம் கேட்க இதெல்லாம் எதுக்கு கேட்டுக்கிட்டு இருக்கீங்க நான் வெளியே இருக்கேன் போன வைங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார் சத்யாவிடம் வந்து இப்பதான் நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா அதுக்குள்ள ஸ்பாயில் பண்ணிட்டாங்க என்று சொல்லுகிறார் நீ என்னோட காதல் அக்செப்ட் பண்ணாலும் எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க என்று வருத்தப்பட எதுவா இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பேஸ் பண்ணலாம் என்று சத்யா சொன்ன இருவரும் சந்தோஷப்படுகின்றனர். எங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் இந்த விஷயம் தெரியும் அவங்க நம்மளுக்கு கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவாங்க என்று சத்யா சொல்லுகிறார். கோவிலுக்கு வந்த மீனா அண்ணாமலைக்காக வேண்டி அடிப்பிரவேசம் செய்ய ஸ்ருதி வருகிறார். அவர்கள் என்ன பேசுகின்றனர்?விஜயா வந்து என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…
Ooroda Oththa Don Lyric Video | Baththa | Vijay Sethupathi | Sai Abhyankkar| Balaji Tharaneetharan
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…